கழட்டி விட்ட சென்னை அணி! பழைய பார்மை அதிரடியாக காட்டிய ரஹானே!
சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் விதர்பா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஹானே 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் : அஜிங்க்யா ரஹானே தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் டிசம்பர் 11-ஆம் தேதி விதர்பா அணிக்கு எதிராக ஆலூர் KSCA மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங்கில் ருத்ர தாண்டவமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம்.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஜிங்க்யா ரஹானே தொடக்கம் என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? என்கிற வகையில் எதிரணி பந்துவீச்சாளர்கள் பந்தை எட்டா பக்கமும் சிதற அடித்தார்.
மொத்தமாக, 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் விளாச அவர் தவறினால் கூட அவருடைய அதிரடி ஆட்டம் பழைய ரஹானேவை நம்மளுடைய நினைவுக்கு கொண்டு வந்தது. அது மட்டுமின்றி, போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறவும் ஒரு காரணமாக அமைந்தது.
இவருடைய இந்த அதிரடி ஆட்டம் ஐபிஎல் போட்டிகளிலும் அவருடைய பேட்டிங் எப்படி இருக்கும் என்பதை எதிர்பார்ப்பை அதிகப்படுத்த மற்றோரு காரணமாகவும் அமைந்தது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் ரஹானே விளையாடி வந்த நிலையில், இந்த முறை அவரை தக்க வைக்காமல் அணி விடுவித்ததது. பொதுவாக அனுபவம் வாய்ந்த வீரர்களை அணியில் வைத்திருக்க பலரும் விரும்புவது உண்டு. ஆனால், ரஹானே பார்ம் பழைய மாதிரி இல்லை என்பதால் என்னவோ அவரை தக்க வைக்காமல் ஏலத்தில் விடுவித்தது. அவரை கொல்கத்தா அணி இந்த முறை ஏலத்தில் எடுத்து.
ஆனால், ஆரம்ப காலத்தை போல பெரிய விலைக்கு ஏலத்தில் அவர் செல்லவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், 2020 , 21 ஆகிய ஆண்டுகளிலெல்லாம் டெல்லி அணி அவரை 5 கோடி கொடுத்து ஏலத்தில் வைத்திருந்தது. அதன்பிறகு சென்னை அணி 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் 50 லட்சம் மட்டுமே கொடுத்து எடுத்து. இந்த முறை அவர் சிறப்பாக விளையாடுவார் என அவர் மீது நம்பிக்கை வைத்து கொல்கத்தா 1.50 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணி நம்மளுடைய மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது எனவே அந்த நம்பிக்கையை குறைக்க கூடாது என்பதற்காக ரஹானே பழைய பார்முக்கு திரும்பி கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு உதாரணம் தான் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் விதர்பா அணிக்கு எதிராக அவர் விளையாடிய இந்த அதிரடி ஆட்டம். எனவே, வருகின்ற ஐபிஎல் தொடரிலும் அதிரடி ஆட்டம் காண்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.