INDvAUS: அபார பந்து வீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா! முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை!

இந்தியாவின் அபார பந்து வீச்சில் சிக்கி ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி, முதல் இன்னிங்ஸ்ல் இந்தியா 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

AUSvsIND

பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில்  தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து தங்களுடைய முதல் இன்னிங்க்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த இந்திய அணி  49.4 ஓவர்களில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்கிஸில் 150 ரன்கள் மட்டும் எடுத்து.

இந்திய அணியில் ரிஷப் பண்ட் 37,கே.எல்.ராகுல் 26, நிதிஷ் ரெட்டி 41,  ரன்கள் எடுத்தனர். ஆஸ்ரேலியா அணி தங்களுடைய பந்துவீச்சில் இந்தியாவை சுருட்டியது போல இந்திய அணியும் சிறப்பாக பந்துவீசி முதல் நாள் முடிவிலே கிட்டத்தட்ட ஆஸ்ரேலியாவை கதி கலங்க வைத்தது என்றே சொல்லலாம்.

ஆஸ்ரேலியா அணியும் தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கியதில் இருந்தே தடுமாற்றத்துடன் தான் விளையாடி வந்த காரணத்தால் முதல் நாள் முடிவில் 27.ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணியை விட ஆஸ்ரேலியா 83 ரன்கள் பின் தங்கி இருந்தது.

இந்நிலையில், முதல் போட்டிக்கான இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், ஏற்கனவே, முதல் நாளில் 7 விக்கெட்களை ஆஸ்ரேலியா இழந்திருந்த காரணத்தால் இன்றும் விக்கெட் குறைவாக இருப்பதால் சற்று தடுமாறிய விளையாடி வந்தது.

நிதானமாக விளையாட வேண்டும் நம்மளிடம் 3 விக்கெட்கள் தான் இருக்கிறது என்ற எண்ணத்துடன் விளையாடி வந்த நிலையில், 51.2 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.  ஆஸ்திரேலியா 46 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இந்திய அணி தற்போது தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்