35 ரன்கள் எடுத்த போது திடீரென…..பரபரப்பை ஏற்படுத்திய வார்னர்…

Default Image
ஏற்கனவே பந்தை சேதபடுத்திய சர்ச்சையில் சிக்கி தடையில் உள்ள வார்னர் உள்ளூர் போட்டியில் பாதி ஆட்டத்தில் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார்.
ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட்   நடவடிக்கை மேற்கொண்டது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்மித்தும், வார்னரும் விளையாடி வருகிறார்கள்.
தற்போது வார்னர்  மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சிட்னியில் இன்று நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பங்கேற்ற வார்னர், பாதி ஆட்டத்தில் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராண்ட்விக் – பீட்டர்ஷேம் அணிக்காக விளையாடிய வார்னர், வெஸ்டர்ன் சப்பர்ப்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது எதிரணியினரின் நடவடிக்கைகளில் அதிருப்திக்கு ஆளாகி, திடீரென மைதானத்தை விட்டு வெளியேறினார். எதிரணியினர் தன்னை கேலி  செய்ததால் அதில் கடுப்பாகி, கள நடுவரிடம் விவரத்தைத் தெரிவித்துவிட்டு அவர் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பிறகு வார்னரை வீரர்கள் சமாதானம் செய்தார்கள். இனிமேல் அதுபோல நடக்காது என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் விளையாட வந்த வார்னர், சதமடித்தார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்