இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தம்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
விக்கெட் இழப்பின்றி 19 ரன்களுடன் 2-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி, தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்த நிலையில் ஷிகர் தவன் 23 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 19 ரன்களிலும் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், சட்டேஷ்வர் புஜாராவும் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியோடு, மெதுவாக ரன்களையும் சேர்த்தனர். 22-வது ஓவரில் ஆண்டர்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் 6000 ரன்களை கடந்தார். மேலும், கவாஸ்கருக்கு அடுத்தப்படியாக குறைந்த இன்னிங்சில் 6000 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
புஜாராவும், கோலியும் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில், கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த வீரர்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும், அசராத புஜாரா, தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். 210 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் விளாசினார்.
சட்டேஷ்வர் புஜாராவின் சதத்தால், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…