ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு..!

asiacup

ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.  இந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி , தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு ஆசியக்கோப்பையில் நேபாளத்துடன் குழு A-யில் இடம் பிடித்த போட்டியாளர்கள் சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் போது, 15 நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS FEB 27
thirumavalavan VCK
vinnaithandi varuvaya
european union donald trump
England players get emotional
Shivaratri