சோயிப் மாலிக் விளையாடும்போது ஷூவில் சிக்கிய ஸ்பூன்.., வைரலாகும் புகைப்படம்..!

 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சோயிப் மாலிக் விளையாடும்போது ஷூவின் அடிப்பகுதியில் ஸ்பூன் ஓன்று சிக்கி கொண்டது. 

பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் தனது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி கயானா அமேசான் அணி மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிராக மோதியது. இப்போட்டியில் நெவிஸ் பேட்ரியாட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் போது ஒரு சுவரசமான சம்பவம் ஓன்று நடைபெற்றது. அது என்னவென்றால் பாகிஸ்தான் மூத்த பேட்ஸ்மேன் சோயிப் மாலிக் பேட்டிங் செய்யும்போது அவரின் ஷூவின் அடிப்பகுதியில் ஸ்பூன் ஓன்று சிக்கியது. பின்னர் அந்த ஸ்பூன் அகற்றப்பட்டது. இதுகுறித்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அதில் ஒரு ரசிகர் “இது மதிய உணவு இடைவேளையிலிருந்து வந்தது போல் தெரிகிறது” என்று கருத்து தெரிவித்தார்.

author avatar
murugan