“ஆன்மிக அரசியல் என்பது மத அரசியல் அல்ல” – தமிழருவி மணியன்

ஆன்மிக அரசியல் என்பது மத அரசியல் அல்ல என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியனுடன் இன்று நடிகர் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழருவி மணியன் அவர்கள், ரஜினிகாந்தை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினியின் கட்சியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும் என்றும், கட்சி தொடர்பான அனைத்து செய்திகளும் ரஜினிகாந்த் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது நேர்மையான அரசியல், அனைத்து மக்களையும் அரவணைத்து செல்வது தான் ஆன்மீக அரசியல். அந்த வகையில், ஆன்மிக அரசியலுக்கு மத அரசியலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்றும் ஆன்மீக அரசியலை முதலில் சொன்னவர் மகாத்மா காந்தி என கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.