soup

Spinach Soup : அட இந்த கீரையில் சூப் செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்…!

By

நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் காணப்படுகிறது. முருங்கை கீரை மிக எளிதில் கிடைக்க கூடிய கீரை ஆகும்.  முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

முருங்கை கீரையில் பெரும்பாலானவர்கள் கூட்டு செய்து தான் சாப்பிட்டு இருப்பார்கள். தற்போது இந்த பதிவில் முருங்கை கீரையை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • முருங்கை இலைகள் – ஒரு கைப்பிடி
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • குழம்பு பொடி – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 3 கப்

முருங்கை கீரை Spinach Soup செய்யும் முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முருங்கை இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறி, முருங்கை இலையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாற வேண்டும்.

இந்த முருங்கைக்கீரை சூப்பை நாம் தினமும் பருகி வந்தால் நமது உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த சூப்பில் இருந்தே கிடைக்கிறது.

Dinasuvadu Media @2023