ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னலில் விரிசல்..! அதிர்ந்து போன பயணிகள்..!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னலில் விரிசல்..! அதிர்ந்து போன பயணிகள்..!

மும்பை-டெல்லி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்த புகைப்படத்தை  விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. அதில் “பாதுகாப்பு என்பது எங்களது மிகுந்த அக்கறை, எந்த நேரத்திலும் விமான நிறுவனம் அதனுடன் சமரசம் செய்யாது. தேவையான நடவடிக்கைகளுக்காக நாங்கள் இதை சம்பந்தப்பட்ட தலைவரிடம் நிச்சயமாக தெரிவிப்போம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு  வருந்துகிறோம் ” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு விமானம் நடுவானில் இருக்கும்போது ஒரு ஜன்னல் முற்றிலுமாக உடைந்தால்  விமானத்தின் உள்ளே அழுத்தப்பட்ட காற்று வெளியேறி, கேபின் அழுத்தம் ஏற்படும்.ஒரு விமானத்தில் உடைந்த ஜன்னலுக்கு அருகில் பயணம் செய்தால் அது பயணிகளை உறிஞ்சக்கூடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
விமானத்தில் ஜன்னல் உடைந்து இருந்தால் சில நொடிகளில் விமானத்தின் உள்ளே உள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலை மாறுபட்டு கேபின் முழுவதும் சத்தமாக மாறும்.அப்போது பயணிகள் சுவாச பிரச்சினைகளையும் எதிர்கொள்ளலாம் எனவும் கூறினர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஸ்பைஸ்ஜெட் விமானம் எஸ்ஜி 8152 விமானத்தில் ஜன்னல் சிதறி இருந்தது தவிர முற்றிலும்உடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube