புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு – அமைச்சர்கள் திறப்பு.!

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டு – அமைச்சர்கள் திறப்பு.!

புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 114 கைதிகளில் 99 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இன்று 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார். அப்போது, மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube