ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர்…

சமீபத்தில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்தார். மேலும் சிந்தியா ஆதரவு மந்திரிகள் 6 பேர் உட்பட  22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் பிரஜாபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராஜினாமா கடிதத்தை ஏன் வழங்கவில்லை..? இந்த முடிவை தாங்களாகவே எடுத்தீர்களா..? அல்லது மற்றவர்களின் நிர்பந்தயத்தில் ராஜினாமா செய்தார்களா..? என கேட்டு  இன்று நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கவேண்டும் என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் லால்ஜி தாண்டன் மற்றும் சபாநாயகரை சந்தித்து பா.ஜ.க. முறையிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan