7 வாரங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியில் சுற்ற தொடங்கிய ஸ்பெயின் மக்கள்.!

ஸ்பெயின் நாட்டில் 7 வாரங்களுக்கு பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தங்கள் தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகின்றனர். உலகம் முழுக்க இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 68,599 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 

இதில் கொரோனாவால் அதிகம்  பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 2வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் 7 வாரங்களுக்கு பிறகு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். 

அவர்கள் தங்கள் தினசரி உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7 வாரங்களுக்கு பிறகு இந்த தளர்வு பொதுமக்களுக்கு சிறுது மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

ஸ்பெயினில் இதுவரை 2,47,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,264 பேர் பாதிக்கப்பட்டுளள்னர். நேற்று மட்டுமே கொரோனாவால் 164 பேர் பலியாகியுள்ளார். கடந்த மார்ச் 18 க்கு பிறகு நேற்றுதான் அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.