ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வெற்றி பயணம்.. சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற வீரர்கள்!

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்றடைந்தனர்.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற நாசா வீரர்களான பெக்கென், ஹர்லி ஆகிய வீரர்களை அங்கு பணிபுரியும் சக வீரர்கள் வரவேற்றனர். அதிகபட்சம் 2 மாதங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி, ஆராய்ச்சி செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், விண்வெளிக்கு இந்நாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இது எலன் மஸ்க்கின் கனவுத்திட்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.