கேரளாவில் இந்த வருட தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளாவில் இந்த வருடத்திற்கான தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தற்பொழுது வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் புவி அறிவியல் மையம் சார்பில் வெளியான அறிக்கையில் இந்த வருடத்திற்கான பருவமழை சாதாரண அளவில் தான் இருக்கும் எனவும் நீண்டகால சராசரியில் 100 சதவீதம் வரை மட்டுமே இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாகவும், இதன் நீண்டகால அறிவிப்பை தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதாவது நீண்டகால சராசரியில் 102 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை வடமேற்கு மழையளவு இந்தியாவில் 107% ஆகவும், மத்திய இந்தியாவில் 103% ஆகவும், தெற்கு இந்தியாவில் 102% ஆகவும், வடகிழக்கு இந்தியாவில் 96% சதவீதமாகும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் 2020 ஆம் ஆண்டு இயல்பைவிட 102 சதவீதம் அதிகரித்து பதிவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal