ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்!

ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்!

நாளை  முதல் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற, முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube