கடந்த பத்து வருடத்தில் ஒரு முறை மட்டுமே பாகிஸ்தானிடம் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் , தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கடந்த பந்து வருடங்களாக இந்த இரு அணிகளும் ஐசிசி நடத்திய கோப்பை போட்டியில் இந்த இரு அணிகளும் ஏழு முறை மோதி உள்ளது. அதில் பாகிஸ்தான் அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி ஒரு முறை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது.
மீதம் உள்ள ஆறு போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கமே உள்ளது.  நேற்றைய போட்டியில்  பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் 5 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
WT20 2009: Pakistan (Seven runs)
WT20 2010: Pakistan (11 runs)
WT20 2012: Pakistan (Two wkts)
CT 2013: South Africa (67 runs)
WC 2015: Pakistan (29 runs)
CT 2017: Pakistan (19 runs)
WC 2019: Pakistan (49 runs)

author avatar
murugan