பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் எண் – உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதார் எண் – உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.

தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கொரோனா ஊரடங்கினால் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது அடையாளச் சான்று கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டியிருந்தது.

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது தொடர்பான நிலை அறிக்கையை இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கிடையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு அல்லது பிற அடையாள அட்டையை கேட்காமல் ரேஷன் விநியோகத்தை தொடர அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாலியல் தொழிலாளிகளுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை இல்லாமல் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வழங்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube