ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து - சவுரவ் கங்குலி..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ்

By bala | Published: Jul 09, 2020 11:42 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது, இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் பள்ளிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் படங்களின் படப்பிடிப்புகள் அணைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கைவிடப்பட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அவர்கள் இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்பொழுது தெரிவித்துள்ளார், கொரோனா வைரஸ் பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மேலும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டிருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆசிய கோப்பை போட்டி ரத்தாகி இருப்பதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அரங்கேறுவதில் இருந்த தடை நீங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc