சூரரை போற்று திரைப்படம் வெளியான திரையரங்கில் தான்.! மாற்றமே இல்லை.!

சூரரை போற்று திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா

By ragi | Published: May 31, 2020 06:35 PM

சூரரை போற்று திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா கூறியுள்ளார்.

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இவரது மனைவி நடித்த பொன்மகள் வந்தாள் படத்தினை ஓடிடியில் வெளியிட தீர்மானித்தை அடுத்து இவரது ஒரு படமும் இனி முதல் திரையரங்குகளில் வெளியிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டித்தனர். அதனையடுத்து சூரரை போற்று படமும் ஓடிடியில் தான் வெளியிடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது சூரரை போற்று படம் திரையரங்குகளில் வெளியிடபடுமா என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு, தனது மனதுக்கு பிடித்த படங்களில் ஒன்று சூரரை போற்று என்று கூறியுள்ளார். மேலும் திரையரங்குகளில் படத்தை பார்க்கும் அனுபவத்தை போன்று வேறு எதிலும் கிடைக்காது என்றும், கூறிய சூர்யா சூரரை போற்று படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் முதலில் வெளியிடப்படும், அதன் பின்னரே ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்

Step2: Place in ads Display sections

unicc