22 பேர் உயிரைக் காப்பாற்றிய நடிகர் சோனு சூட்..!!

சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் 15 சிலிண்டர்களை பெங்களூர் மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.

கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூரு உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு பல தரப்பில் கேட்டனர், ஆனால் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சத்யநாராயணன் என்பவர் , தனக்கு தெரிந்த நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சோனு சூட்டும் தனக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் தகவலை தெரிவித்து ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு ஏற்பாடு செய்து முதலில் ஒரு சிலிண்டர் ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்  சோனுசூட்டும் அவரது அணி உறுப்பினர்களும் சில மணி நேரத்தில் மேலும் 15 சிலிண்டர்களை மருத்துவமனைக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தனர். இதன் மூலம் 22 கொரோனா நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. சோனு சூட் செய்த இந்த உதவிக்காக பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.