வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்.!

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகளுக்கு சோனு சூட் ட்வீட் ஒன்றை பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் உள்ளிட்ட பல உதவிகளை செய்துள்ளார் சோனு சூட்.

இந்த நிலையில் நடிகர் சோனு சூட் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார் .அதாவது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லிக்கு பேரணி மேற்கொண்ட பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளை ஹரியானா போலீசார் ஹரியானா-டில்லி மாநில எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தினர் . இதனை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினார்கள் .

இந்த நிலையில் தற்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு சோனு சூட் “விவசாயி என் கடவுள்” என்ற ட்வீட்டை பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார் . விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனு சூட்டின் ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.