கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்? காரணம் என்ன? வாருங்கள் அறியலாம்!

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்? காரணம் என்ன? வாருங்கள் அறியலாம்!

ஒரு பெண் கர்ப்பமாக உள்ளார் என்ற நற்செய்தி அறிந்தாலே அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை விட அதிகமாக குவிவது கட்டுப்பாடுகள் தான். ஏனென்றல் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பு கருதி, கருச்சிதைவை தடுக்க தான் பெரியவர்கள் சில கட்டு பாடுகளை கூறுவார்கள்.

அதாவது கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பகாலத்தில் உண்ணக்கூடாத உணவுகள் சில இருக்கின்றன. பலன்கள் மற்றும் காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், அதிலும் பப்பாளி, அன்னாசி மற்றும் பலா ஆகிய பழங்களை மட்டும் உட்கொள்வதை தவிர்ப்பது நலம், ஏனென்றால் இவைகள் மூன்றும் கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடியது.

மேலும் அதிக காரமுள்ள, அதிக சூடுள்ள மற்றும் அதிக குளிருள்ள பொருள்களை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். அதிக தூர பயணங்கள் மற்றும் அதிக எடை கொண்ட பொருள்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தை இயற்கை கொடுத்துள்ள வரம், இவை கிடைப்பது மிக பெரிய பொக்கிஷம் எனவே அலட்சியம் காட்டாமல் கர்ப்பிணிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube