கர்ப்பகால சிக்கல்களை உணர்த்தும் சில அறிகுறிகள்.!

இந்த பதிவில், சில எச்சரிக்கை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் குறித்து, பார்த்துக்கொண்டு கர்ப்ப காலத்தில் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கலாம்.

கர்ப்பகாலம் என்பது மகிழ்ச்சியான ஒரு காலகட்டம். இருப்பினும் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எளிமையான பிரசவத்திற்கு போதுமான ஓய்வு மிகவும் அவசியம். இருப்பினும் முழுமையான கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சில வகை சிக்கல்களை அனுபவிக்க நேரலாம். வெளிப்புற காரணிகள், உடல்நிலை அல்லது வேறு சில அசம்பாவிதங்கள் போன்றவை இந்த உணர்திறன் மிக்க காலகட்டத்தில் சில சிக்கல்கள் தோன்ற காரணமாக இருக்கக்கூடும்.

அதிக அளவு வலியுடன் சுருக்கம்:

பொதுவாக, சிறிய வயிறு வலி கர்ப்ப காலத்தில் இருப்பதை விட அதிக அளவு வயிறு சுருங்கி விரிவதற்கான அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால் அது தீவிர நிலையை கொடுப்பது ஒரு அறிகுறியாகும்.

அதிகமான இரத்தப்போக்கு:

கர்ப்ப கால தொடக்கத்தில் பல பெண்கள் இரத்தப்போக்கு குறித்து மருத்துவரிடம் கேட்பார்கள். இது, ஒரு இயல்பான செய்திதான். ஆனால், அதேபோல் கர்ப்ப காலத்தின் இறுதியில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதனை நிச்சயம் அலட்சியம் காட்ட வேண்டாம். நஞ்சுக்கொடி அசாதாரணமாக இருக்கும் பெண்களுக்கு இந்த இரத்தப்போக்கு ஆபத்தில் நிப்பாட்டும். இதனால்., குழந்தை மற்றும் தாய்க்கு அதிக சிக்கலை உண்டாக்கக்கூடும்.

பார்வைக் கோளாறு:

கர்ப்ப காலத்தில் கடைசி இரண்டு மாதங்களில் மயக்கம் மற்றும் பார்வை மங்குதல் போன்ற ஏற்படும் இயல்பு தான் குறிப்பிட்ட வேலையில் கவனமாக இருக்கும் போது பார்வை மங்குதல் போன்ற குறைபாடு அடிக்கடி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இதில், குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த அறிகுறி மிக ஆபத்தானது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment