‘சமூக நீதி காவலர் ‘ – தமிழக முதல்வரை இலங்கை வருமாறு விடுத்த இலங்கை எம்.பி..!

தமிழக வம்சாவளியினர் இலங்கை வந்து  200 ஆண்டுகளாகிறது. இது  தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு. 

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வண்ணமாக தமிழக அரசு சார்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்குமான நிவாரண உதவியை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக ஒரு கோடி நிதியுதவியும், அதிமுக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளது. மேலும் எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி இலங்கையருக்கு உதவ தீர்மானித்து நம் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கூற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மெய்ப்பித்து உள்ளார். தமிழக முதல்வரின் சமூக நீதிக் கொள்கை அனைத்து மாநிலங்களையும் சென்றடைகிறது.

மேலும், தமிழகத்தை சேர்ந்த மலையக தமிழர்கள் இலங்கை வந்து  200 ஆண்டுகளாகிறது. இது  தொடர்பான விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.