பெய்ஜிங்கில் இதுவரை 11 மில்லியன் சோதனை முடிவாக நேற்று பாதிப்பு பூஜ்ஜியம்

சீன தலைநகரான பெய்ஜிங்கில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

By Castro Murugan | Published: Jul 07, 2020 11:42 PM

சீன தலைநகரான பெய்ஜிங்கில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .

இது சீனாவில்  இரண்டாவது அலை குறித்த அச்சத்தைத் தூண்டியது. ஜூன் மாத தொடக்கத்தில் நகரத்தின் மிகப்பெரிய ஜின்ஃபாடி மொத்த சந்தையின் மூலமாக பரவியது கண்டறியப்பட்டது இதில் 335 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த சமீபத்திய பரவுலுக்கான காரணம் குறித்து சீன அதிகாரிகள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கையில், ஜின்ஃபாடி சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட சால்மனைக் கையாளப் பயன்படும் பலகைகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது.பெய்ஜிங் அரசாங்கம் ஜூன் 11 முதல் 11 மில்லியனுக்கும் அதிகமான மக்களை COVID-19 க்கு பரிசோதித்துள்ளது - நகர மக்கள்தொகையில் பாதி என்று அதிகாரிகள் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் பெய்ஜிங்கின் சுகாதார ஆணையம் செவ்வாயன்று ஒரு அறிகுறியற்ற நபரை மட்டுமே கண்டறிந்தது, இதை  சீனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின்  எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.ஜூன் மாதத்தில் தோன்றிய இந்த இரண்டாவது அலை பரவத்  தோன்றியது அதன் பின்னர் முதல் முறையாக நேற்று யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Step2: Place in ads Display sections

unicc