20 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்பொழிவு…! உறைந்து போன நயகரா நீர்வீழ்ச்சி…! வைரலாகும் புகைப்படம்…!

கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது.

பல இடங்களில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இயற்கை சீற்றங்களும் பல இடங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா நாட்டில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது. நீர்வீழ்ச்சி தொடக்கம் முதல் நீர் தேங்கும் இடம் வரை அனைத்தும் உறைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் அழகிய காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.