வேட்புமனு தாக்களால் சர்சையில் சிக்கிய ஸ்மிரிதி இராணி ! பட்டம் வாங்காதது அம்பலம்! நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை

ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்த போது பட்டப்படிப்பு முடிக்கவில்லை  என்று தெரிவித்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது.முதற்கட்ட தேர்தல் நேற்று  நடைபெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டது.அதேபோல் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.உத்தரபிரதேசம் அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Related image

ஸ்மிரிதி இராணி வேட்புமனு தாக்கல் செய்த போது பட்டப்படிப்பு முடிக்கவில்லை  என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால் ஸ்மிரிதி இராணி கடந்த 2014-ஆம் ஆண்டு  வேட்புமனு தாக்கல் செய்தபோது, 1994ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால் காங்கிரஸ் தவறான தகவல்களை தெரிவித்து இருந்ததாக  புகார் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் காங்கிரஸ் எழுப்பியுள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில், தவறான தகவல்களை சொல்லி ஏமாற்றிய அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம்  தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் அவர் மீது தேரத்ல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment