5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென விமானத்தில் ஏற்பட்ட புகை.! அலறிய பயணிகள்.!

5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென விமானத்தில் ஏற்பட்ட புகை.! அலறிய பயணிகள்.!

  • ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
  • விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது.

ருமேனிய தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து லண்டனுக்கு ரயன்ஏர் என்ற போயிங் 737-800 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு 5,000 அடிக்கு மேல் சென்றபோது திடீரென கேபினில் புகை நிரப்பத் தொடங்கியது.

இதனால் பயணிகள் பீதியடையத் தொடங்கினர். திடீரென ஏற்பட்ட கரும்புகை காரணமாக பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் பயணிகளுக்கு ஆக்ஸிஜன் அடங்கிய முகமூடி கொடுக்கப்பட்டு ஆட்டோபெனி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பான வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் ஆட்டோபெனி விமான நிலையத்தில் இருந்து வேறு விமானம் மூலம் பயணிகள் லண்டன் சென்றனர். காலை 6.40 மணிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த விமானம் இந்த சம்பவம் காரணமாக உள்ளூர் நேரப்படி காலை 10.57 மணிக்கு மாற்று விமானத்துடன் சென்றது.

 

 

author avatar
murugan
Join our channel google news Youtube