தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளை இழந்த ஸ்மித் .! முதலிடத்தை தொடரும் கிங் கோலி .!

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது.
  • ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இரண்டாவது போட்டி வருகின்ற 26 -ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்  தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 928 புள்ளிகள் எடுத்த நிலையில் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு  எதிராக விளையாடிய  முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 43 , இரண்டாவது இன்னிங்சில் 16 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள்  பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும்  2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன 3-வது இடத்திலும் , புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே  6-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 143 ,இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் 786 புள்ளிகள் பெற்று  3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

author avatar
murugan