பைடனின் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ள நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட சிறிய பாறை துண்டு!

பைடனின் அலுவலகத்தில் வைக்கப்படவுள்ள நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட சிறிய பாறை துண்டு!

பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக, கடந்த 20ஆம் தேதி ஜோ பைடன் அவர்கள் பதவி ஏற்றார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இவர் தனது பணியை தொடங்கி உள்ளார். பைடனின் அலுவலகத்தில், 1972 ஆம் ஆண்டில் நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 332 கிராம் எடையுள்ள ஒரு சிறிய பாறையை ஜோ பைடன் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று  அலுவலகத்தில் காட்சிக்கு வைக்க நாசா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பாறை 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாகும். இந்த பாறை துண்டு  முந்தைய தலைமுறையினரின்  இலட்சியங்கள் மற்றும் சாதனைகளை அடையாளமாக ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube