மாஸ் தலைப்புடன் நாளை பூஜை தொடங்குகிறது! SK15 படப்பிடிப்பு அப்டேட்ஸ்!!

மாஸ் தலைப்புடன் நாளை பூஜை தொடங்குகிறது! SK15 படப்பிடிப்பு அப்டேட்ஸ்!!

  • சிவகார்த்திகேயன் – ‘இரும்புதிரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இணையும் புதிய படம் நாளை தொடங்குகிறது.
  • இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
    யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
  • ராஜேஷ்.எம், ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார், ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் என வரிசையாக வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்து தற்போது முன்னனி ஹீரோ வரிசையில் இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இருந்தாலும் கனா படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நின்றுவிட்டார்.

அடுத்தடுத்து நல்ல இயக்குனர்களுடன் சேர்ந்து படம் நடித்து வருகிறார். ராஜேஷ்.எம் இயக்கத்தில் MR லோக்கல் படம் அடுத்ததாக ‘இன்று நேற்று நாளை ‘ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சைன்ஸ் பிக்சன் திரைப்படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் ஒரு படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்ப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என கலக்கலாக கூட்டணி அமைத்து வருகிறார்.

இதில் பி.எஸ்.மித்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. நாளை இப்படத்தின் தலைப்பும் வெளியாக உள்ளது. இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *