ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்த SK மற்றும் மக்கள் செல்வன்.! ஏன் தெரியுமா.?

விஜய் சேதுபதியின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை

By ragi | Published: Jul 13, 2020 02:13 PM

விஜய் சேதுபதியின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனையும், சிவகார்த்திகேயன் 6மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதி பல படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்து வருகிறார். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ள இவரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதனையடுத்து சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இருவருக்கும் ரசிகர்கள் ஏராளம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இவரது டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் விஜய் சேதுபதியின் டுவிட்டர் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை எட்டியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 6 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்றுள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர்களது ரசிகர்கள் மக்கள் செல்வனுக்கு #MillionVSPians என்ற ஹேஷ்டேக்கையும் , சிவகார்த்திகேயனுக்கு #6MHeartsForPrinceSK என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி தற்போது பாராட்டுகளை தெரிவித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc