புலியோடு நடித்த என்னை எலியோடு நடிக்க வைக்கிறிங்களே?!! S.J.சூர்யா குமுறல்!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அசாதாரணமான நடிப்பால் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளர்ந்து வருகிறார். அவரது. நடிப்ப்பில் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஒருநாள் கூத்து பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.

இப்பட ஷூட்டிங் நடந்து வருகிறது இதன் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா, பல புலிகளோடு நடித்த என்னை ஒரு எளியோடு நடிக்க வைச்சிட்டீங்களே என கூறியிருந்தார். அதனுடன் படத்தின் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்.

DINASUVADU