அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பறிபோன ஆறு மாத குழந்தையின் உயிர்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா

By leena | Published: Apr 02, 2020 05:21 PM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கனக்டிகட் மாகாணத்தில் உள்ள  ஹார்ட்போட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 6 வாரங்களே நிரம்பிய குழந்தை இருந்தது. அந்த குழந்தை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்தக் குழந்தையை அசைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தது.  உடற்கூறாய்வு சோதனையில் அக்குழந்தைக்கு கொரோனோ தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. 

இதுகுறித்து, கனெக்டிகட் மாகாண ஆளுநர், “ கனெக்டிகட்  மாகாணத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குறைந்த வயது கொண்டதாக இந்த குழந்தைதான் இருக்கக் கூடும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை நமக்கு இந்தக் குழந்தையின் உயிரிழப்பு நினைவூட்டுகிறது” என்று கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc