தெலுங்கில் ரிலீஸாகவுள்ள சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்..!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் நிறுவனம் வரும் அக்டோபர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யவுள்ளனர்.