இன்று வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்…!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் இன்று வெளியாகிறது. 

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், வினய், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம்  இப்படம் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் தாமதமான நிலையில் இன்று இப்படம் திரை அரங்கில் வெளியாகிறது. இப்படத்தை காண சிவாகார்த்திகேயன்  ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.