டாக்டர் படத்திலிருந்து  சிவக்கார்த்திகேயனின் #Chellamma பாடல் இன்று.!

சிவக்கார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் #Chellamma பாடல் இன்று

By ragi | Published: Jul 16, 2020 12:17 PM

சிவக்கார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் #Chellamma பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று 'டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள #Chellamma என்ற பாடலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்த பாடலின் நகைச்சுவை கலந்த டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்த பாடலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 
Step2: Place in ads Display sections

unicc