தெலுங்கு மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.! 5 சண்டை காட்சிகளுடன் மாஸ் ஹீரோவாக என்ட்ரி

தெலுங்கு மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.! 5 சண்டை காட்சிகளுடன் மாஸ் ஹீரோவாக என்ட்ரி

அல்லு அர்ஜுன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான அல் வைகுந்தபுரமுலு படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். "இன்று நேற்று நாளை " படத்தை இயக்கிய ரவிக்குமாரின் "அயலான்" படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் "டாக்டர்" படத்திலும் நடித்து வருகிறார்.காமெடியனாக களமிறங்கிய சிவகார்த்திகேயன் தற்போது கமர்ஷியல் படங்களில் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ஆக்ஷன் படமாக வெளியாகி வசூலை குவித்த படம் அல் வைகுந்தபுரமுலு. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளிஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். 100கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் 220 கோடி வரை வசூலை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை சிவகார்த்திகேயன் வாங்கியுள்ளதாகவும், அதனை தனது எஸ் கே புரொடக்ஷன் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் படமான இந்த படத்தில் மாஸ் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடித்து கலக்கியிருப்பார். 5 சண்டை காட்சிகளை கொண்ட இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு செட்டாகுமா என்ற சந்தேகம் பலரிடமும் உண்டு. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Posts

பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்