நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார் சிவகார்த்திகேயன்..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஜி.தாஸ் நினைவு அறக்கட்டளை மூலமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் இந்த இக்கட்டான  சூழ்நிலையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் நலனுக்காக பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் னது ‘ஜி.தாஸ் நினைவு அறக்கட்டளை’ மூலமாக நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.