யுவனின் இசையில் மீண்டும் வெற்றிக்கூட்டணி அமைத்த மக்கள் செல்வன்! ‘சிந்துபாத்’ அப்டேட்ஸ்!!

சேதுபதி படத்தில் இயல்பான போலிஸ்காரராகவும், அழகனா கணவராகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இந்த படத்தை S.U.அருண் குமார் என்பவர் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து இயக்கி இருந்தார்.

தற்போது மீண்டும் அதே அருண்குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படத்திற்கு ‘சிந்துபாத்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மக்கள் செல்வன் கொஞ்சம் இளைத்தது போல இளமை தோற்றத்தில் உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment