மாநாடு படத்தை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படம்.!

நடிகர் சிம்பு மாநாடு படத்தினை தொடர்ந்து மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மென்டல் எனும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.வழக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யும் சிம்பு தற்போது சரியாக அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிம்பு அடுத்ததாக மப்டி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .மாநாடு படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு “மென்டல்” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ,இதனை டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டதாகவும்,இதனை சிறிய பட்ஜெட் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.