ஓடிடியில் கே.ஜி.எஃப் -2.?டிஜிட்டல் திரையில் சிக்குவாரா ராக்கி பாய்..?!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு வேலையும் முடிவடைந்து விட்டது. படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே முதல் வேலை. அப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பல திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில், கே.ஜி.எப்-2 படத்தை ஓடிடியில் வெளியீட படதயாரிப்பு நிறுவனத்திடம் பிரபல ஓடிடி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். படத்திற்கு 250 கோடி ருபாய் விலையும் பேசப்பட்டதாம். ஆனால், படக்குழு  மறுத்துவிட்டதாம். கே.ஜி.எப்-2 திரைப்படம் தியேட்டர் அனுபவத்திற்காக எடுக்கப்பட்டது. அதனை தியேட்டரில் கண்டுகளித்தல் தான் ரசிகர்களுக்கு அப்படம் மகிழ்ச்சியை தரும். என படக்குழு மறுத்துவிட்டதாம்.

கே.ஜி.எப்- 2 திரைப்படத்திற்கு இந்திய முழுவதும் எதிர்பார்ப்பு எகிறி போய் உள்ளது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிகர் செய்தாலே போதும், கே.ஜி.எப் -2 வசூல் மழை பொழியும் என்பது தயாரிப்பாளருக்கு நன்றாகவே தெரியும் அதனால் தான் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு காத்திருக்கிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.