SIIMA2021: 7 விருதுகளை அள்ளி குவித்த சூரரைப்போற்று.!

7 சைமா விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெற்றுள்ளது. 

சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. இந்த விருது விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

SooraraiPottru SIIMA2021

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. விமான நிறுவனத்தை நிறுவிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார். படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

soorarai pottru

ரசிகர்களுக்கு மத்தியில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. அந்த வகையில், தற்போது சைமா விருதில் 7 விருதுகளை வென்றுள்ளது.

SooraraiPottru 2

அதன்படி, 2020 ஆம் ஆண்டு சிறந்த நடிகராக சூரரைப்போற்று படத்தில் நடித்த சூர்யாவும், சிறந்த திரைப்படமாக சூரரைப்போற்று படமும், சிறந்த இயக்குனராக சுதா கொங்கராவும், சிறந்த நடிகையாக அபர்ணா முரளியும், சிறந்த இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும், சிறந்த ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும், சிறந்த பாடகராக வெய்யோன் சில்லி பாடலை பாடிய ஹரிஷ்யும் உள்ளிட்ட 7 விருதுகளை சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.