வெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா..? அதிர வைக்கும் பக்க விளைவுகள்!

வெங்காயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்து உண்டாகுமா..? அதிர வைக்கும் பக்க விளைவுகள்!

நாம் சாப்பிட கூடிய உணவுகளின் தன்மையை அறிந்து எப்போதும் உண்ண வேண்டும். காரணம் சில உணவுகள் நாம் நினைப்பதை போன்று வெறும் ஆரோக்கியத்தை தருவதோடு, சிலபல பக்க விளைவுகளையும் உடலில் உண்டாக்கும். இது போன்ற பக்க விளைவுகள் சில சமயம் மோசமனாதாகவும் இருக்கும்.

சமையலில் நாம் அதிகம் சேர்த்து கொள்ளும் உணவான வெங்காயத்திலும் இதே பாதிப்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தை ஒரு சில குறிப்பிட்ட நேரங்களின் போதும், அதிக அளவிலும் சாப்பிட கூடாதாம். மீறி சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படுகின்ற பக்க விளைவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் அறியலாம்.

இரத்த அழுத்தம்
வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல வித மாற்றங்கள் உண்டாகும். அதில் ஒன்று தான் இரத்த அழுத்தம் குறைதல். வெங்காயத்தால் பலவித நன்மைகள் உண்டாகிறது என்பதற்காக அதிக அளவில் சாப்பிட கூடாது. பிறகு இது உங்கள் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.

அடிவயிறு பாதிப்பு
உடலில் சிறிது நேரம் இரத்தம் கட்டி கொண்டாலே நம்மால் பொருத்து கொள்ள இயலாது. இது ஒருபுறம் இருக்க வெங்காயத்தை அதிகம் சாப்பிடுவதால் அடிவயிற்றில் வீக்கம் ஏற்பட்டு உங்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தினால் அவ்வளவு தான். ஆதலால், எப்போதும் சீரான அளவே வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள்.

நெஞ்செரிச்சல்
வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும். வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவு குழாய் வழியாக மார்பு பகுதிக்கு வரும்போது நெஞ்சு பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், இது மிக மோசமான தாக்கத்தையும் உண்டாக்க கூடும்.

தாய்மார்களுக்கு
கர்ப்பமாக உள்ள பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் வெங்காயத்தை தவிர்த்து வருவது நல்லது. ஏனெனில் இது குழந்தைக்கும் சேர்த்தே பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆதலால், குறைந்த அளவில் வெங்காயத்தை உணவில் சேர்த்து கொண்டால் நல்லது.

அலர்ஜிகள்
சிலருக்கு ஒரு சில உணவுகள் உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கி விடும். எப்படி கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு உடலில் அரிப்பு உண்டாகிறதோ அதே போன்று வெங்காயத்தை அதிக அளவில் சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமை உண்டாகும்.

எனவே, வெங்காயத்தை அளவாக உண்பது நல்லது. இல்லையெனில் மேற்சொன்ன பாதிப்புகள் உடலில் ஏற்படும்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *