கொரோனா நோயாளிகளுக்கு சித்தா மற்றும் யோகா சிகிச்சை – விஜயபாஸ்கர்.!

கொரோனா நோயாளிகளுக்கு சித்தா மற்றும் யோகா சிகிச்சை – விஜயபாஸ்கர்.!

 சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுக்கு பெரும்பாலும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட இருக்கிறது. அதனால் அவர்கள் தொடர்ந்து சுவாசப் பயிற்சியில் ஈடுபட்டால் சுவாசப் பாதைகள் சீராகும். இதனைக் கருத்தில்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் இடங்களுக்கே சென்று இப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

86 இடங்களில் யோகா மற்றும் இயறக்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பணியில் 200-க்கும் மேற்பட்ட அரசு யோகா யோகா மற்றும் இயறக்கை மருத்துவகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் உத்தரவில், ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது இதன்மூலம் 61,000-திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube