34.4 C
Chennai
Friday, June 2, 2023

சித்தராமையா பதவியேற்பு விழா..! மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை..!

சித்தராமையா பதவியேற்பு விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை.

கர்நாடக முதல்வர் யார் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். அதன்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சித்தராமையா பதவியேற்பு விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. மம்தா சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை குழு துணை தலைவர் சுகோலிகோஷ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.