கர்நாடக அமைச்சரவை பங்கீடு தொடர்பாக டெல்லியில் சித்தராமையா- டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி , ஏற்கனவே முதல்வராக பதவியில் இருந்த சித்தராமையாவை மீண்டும் முதல்வராக அறிவித்துள்ளது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும், மாநில கட்சி தலைவர் பொறுப்பிலும் தொடர்வார் என அறிவித்தது.
இதனை தொடர்ந்து முக்கிய இலாக்காக்கள் குறித்த அமைச்சரவை பங்கீட்டில் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முக்கிய தலைவர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று மாலை பெங்களூருவில் புதிய முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார்.