மகா காளியாக உருவெடுத்த சியான் விக்ரம்.! “மகான்” பர்ஸ்ட் லுக் வெளியீடு.!

விக்ரமின் 60 வது படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்திற்கு மகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோவில் விக்ரம் புல்லட் பைக்கில் வருகிறார். அவர் பின்னர் காளி வேடம் போட்டவர் இருக்கிறார். அவருடைய முகம் தெரியவில்லை. விக்ரமின் பின்னர் பல கைகள் இருப்பது போலவும், அவர் காளி போலவும் போஸ்டர் வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் பர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.