Wednesday, November 29, 2023
Homeகிரிக்கெட்சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!

சதம் விளாசிய ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் .. நெதர்லாந்திற்கு 411 ரன்கள் இலக்கு..!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இன்று இந்தியா – நெதர்லாந்து அணி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதற்கு அதன்படி இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் நெதர்லாந்து அணி திணறியது.  இருப்பினும் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் அரை சதம் விளாசினார்.  அரைசதம் அடித்த அடுத்த சில நிமிடங்களில் சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்து 51 ரன்னில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து கோலி களமிறங்க நிதானமாக விளையாடி வந்த ரோகித் 54 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என மொத்தம் 61 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவர் கூட்டணியில் 100 ரன்கள் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் , விராட் கோலி இருவரும் கூட்டணி அமைக்க வழக்கம் போல சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதத்தை கடந்து சுப்மன் கில் போல 51 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 594 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அடுத்து இறங்கிய கேஎல் ராகுல் உடன்  இணைந்து சிறப்பாக அணியின் எண்ணிக்கையை ஷ்ரேயாஸ் ஐயர் மேலும் உயர்த்தினார்.

இதில் அதிரடியாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 84 பந்தில் சதம் விளாசினார். மறுபுறம் விளையாடிய கே.எல் ராகுலும் 62 பந்தில் சதம் விளாசினார். அடுத்த 2 பந்தில் 102  ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தனர். கடைசி வரை களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 94 பந்துகளில் 10 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 128 * ரன்களுடன் இருந்தார்.

கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரும் கூட்டணியில் 210 ரன்கள் சேர்க்கப்பட்டது. நெதர்லாந்து அணியில்  பாஸ் டி லீடே 2 விக்கெட்டையும் , பால் வான் மீகெரென், வான் டெர் மெர்வே, தலா 1 விக்கெட் பறித்தனர். இந்திய அணியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அரைசதம் விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.