உங்கள் வீட்டில் கொத்தமல்லி 1 வாரம் அழுகாம இருக்கணுமா?

உங்கள் வீட்டில் கொத்தமல்லியை ஒரு வாரத்திற்கும் மேலாக வாடி போகாமல் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் வாருங்கள் பார்க்கலாம்.

காய்கறி வாங்கும் போது இறுதியில் கேட்டு வாங்க கூடிய இரு பொருள் கறிவேப்பிலை கொத்தமல்லியை வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால், ஒருமுறை வாங்கிய கொத்தமல்லி நீண்ட நாட்கள் புதிதாக இருப்பதில்லை. அடுத்த சில நாட்களில் வாடியும் அழுகியும் போகிறது, அதற்கு என்ன செய்யலாம் என பார்ப்போம் வாருங்கள்.

மஞ்சள் தண்ணீர் பயன்படுத்தலாம்:

ஒரு கொத்தமல்லி கட்டு வாங்கி அதன் வேர்ப்பகுதியை முதலில் வெட்டவும் அதன் பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அந்த மஞ்சள் நீரில் கொத்தமல்லி கட்டை அரை மணி நேரம் ஊறவையுங்கள்.

பிறகு நன்றாக கழுவி அதனை உலர விட்டு எடுக்கவும். அடுத்ததாக உலர்ந்த கொத்தமல்லியை ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஒரு காற்றுப்புகாத டப்பாவை எடுத்து உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக இருக்க உதவும்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.